செய்திகள் :

சூர்யா 45' படத்தின் டைட்டில்... பிறந்த நாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

post image

'ரெட்ரோ'வுக்கு கிடைத்த வரவேற்புகளில் மகிழ்ந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இன்னொரு பக்கம் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'சூர்யா 45' படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.

trisha

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் சூர்யாவின் ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். சூர்யா, த்ரிஷா ஜோடி இதற்கு முன் 'மௌனம் பேசியதே', 'ஆறு', 'மன்மத அன்பு'வில் ஒரு பாடல்... பின்னர் இப்போது 'சூர்யா 45'ல் இணைந்துள்ளனர்.

இதில் யோகிபாபு, நட்டி நட்ராஜ், 'லப்பர் பந்து' சுவாசிகா. 'நெடுஞ்சாலை' ஷிவதா, மலையாளத்தில் 'ஹோம்' படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இந்திரன்ஸ் என பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

rj பாலாஜி

பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு கோவையைத் தொடர்ந்து சென்னையில் நடந்து வருகிறது. சென்னையில் ஈ.சி.ஆரில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிரமாண்டமான திருவிழா செட் அமைக்கப்பட்டு, சூர்யா - த்ரிஷா ஜோடியின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பிரசாத் லேப்பிலும் அரங்கம் அமைத்து சூர்யா, த்ரிஷா காம்பினேஷனில் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

டைட்டில் கிளிம்ஸ்

ஆர்.ஜே.பாலாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மீதமிருக்கின்றன என்றும் 'ரெட்ரோ'வில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் பேசப்பட்டது போல, இதில் த்ரிஷாவின் ரோல் பேசப்படும் என்கிறார்கள்.

suriya

வரும் ஜூலை மாதத்தில் சூர்யாவின் பிறந்த நாள் வருகிறது. அன்று படத்தின் டைட்டில் கிளிம்ஸ் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 'பேட்டைக்காரன்', 'கருப்பு' என சில டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. சூர்யாவின் 'ரெட்ரோ' தியேட்டர்களில் ஓடி வருவதால், அடுத்த மாதத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஜூலையில் 'லக்கி பாஸ்கர்' இயக்கத்தில் வெங்கி அட்லூரி படப்பிடிப்பிற்கு சூர்யா செல்கிறார் என்கிறார்கள்.

நடிகர் சூப்பர் குட் ஃபிலிம் சுப்ரமணி காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்!

30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றியவர் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் நடித்த மகாராஜா, சூரரை போற்று, ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தனக்கு கொடுக்கப்ப... மேலும் பார்க்க

RETRO: ரெட்ரோ வெற்றி; சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், 'டாணாக்காரன்' தமிழ் எனப்... மேலும் பார்க்க

Simran: "ஒரு பிரபலமாக வாழ்வது எளிதான விஷயமல்ல; காரணம்.." - குழந்தைகள் பற்றி கேள்விக்கு சிம்ரன் பதில்

சசிக்குமார், சிம்ரன் நடித்திருந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார் சிம... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 03 : `கணவர்கிட்ட இருந்து தப்பிக்க வீட்டை சுத்தி ஓடியிருக்கேன்' - நடிகை ரதி பர்சன்ல்ஸ்

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவ... மேலும் பார்க்க

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்? உண்மை என்ன?

'ராக்கி', 'சாணிக் காயிதம்', 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், அடுத்து லோகேஷுடன் கைகோர்க்கிறார் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் ஒலிக்கிறது.ஆங்கில வெப்சீரீஸான Grotesquerie பாணியில் அ... மேலும் பார்க்க

Devayani: ``நானும் ராஜகுமாரன் சாரும் எங்க குழந்தைகளை மாத்தி மாத்தி பார்த்துக்குறோம்!'' - தேவயானி

தேவயானி நடிப்பில் உருவாகியிருக்கிற 'நிழற்குடை' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 2018-க்குப் பிறகு தேவயானி நடிக்கும் தமிழ் திரைப்படம் இது. இப்படத்தில் தேவையாணி ஈழ தமிழராக நடித்திரு... மேலும் பார்க்க