செய்திகள் :

சூர்யா - 46 படப்பிடிப்பு துவக்கம்!

post image

நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது கூட்டணியில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், அவரது 46-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று (ஜூன் 11) வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

நடிகர் துனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப் புதிய படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் மீண்டும் லக்கி பாஸ்கர் படத்தின் தொழிநுட்பக் குழுவினர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: 3,000 காட்சிகள் குறைப்பு: படுதோல்வியை நோக்கி கமலின் தக் லைஃப் திரைப்படம்!

பீனிக்ஸ் வீழான்: முன்னோட்ட விடியோ!

விஜய் சேதுபதி மகன் நாயகனாக நடித்துள்ள ‘பீனிக்ஸ் வீழான்’ படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.விஜய்சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’. இந்த படத்தை சண்டைப் பயிற்சி... மேலும் பார்க்க

மகாநதி தொடரில் விலகிய ஆதிரை... இனி இவர்தான்!

மகாநதி தொடரில் யமுனா பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஆதிரை, இத்தொடரில் இருந்து விலகிய நிலையில் இப்பாத்திரத்தில் நடிகை ஸ்வேதா நடிக்கிறார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2... மேலும் பார்க்க

ரூ.300 கோடி வசூலைக் கடந்த ஹவுஸ்ஃபுல் 5!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் - 5 திரைப்படம் ரூ. 300 கோடியைக் கடந்துள்ளது.பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் - இயக்குநர் தருண் மன்சூகானி ஆகியோரின் கூட்டணியில் ஹவுஸ்ஃபுல் - 5 திரைப்படம் உருவா... மேலும் பார்க்க

இன்டர் மிலன், மான்செஸ்டர் சிட்டி தோல்வி: ரசிகர்கள் அதிர்ச்சி!

கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மிலன், மான்செஸ்டர் சிட்டி தோல்வியடைந்தது அந்த அணிகளின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபிஃபா முதல்முறையாக நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில... மேலும் பார்க்க

சிலைகளுடன் விளையாடும் மெஸ்ஸி..! இன்டர் மியாமியை விமர்சிக்கும் இப்ராஹிமோவிச்!

கிளப் உலகக் கோப்பையில் பிஎஸ்ஜி அணி இன்டர் மியாமியை வீழ்த்தியது குறித்து இப்ராஹிமோவிச் ‘மெஸ்ஸி தோற்கவில்லை இன்டர் மியாமிதான் தோற்றது’ எனப் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.கிளப் உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 ... மேலும் பார்க்க