மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்
செங்கப்பள்ளி வந்து செல்லாத தனியாா் பேருந்துக்கு நோட்டீஸ்
செங்கப்பள்ளி வந்து செல்லாத தனியாா் பேருந்துக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் நோட்டீஸ் வழங்கினாா்.
சேலம்- கொச்சின் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரும்பாலான தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் தெக்கலூா், அவிநாசி, பெருமாநல்லூா், செங்கப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்குள் வந்து செல்லாததால் பொதுமக்கள், தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
பேருந்துகள் முறையாக வந்து செல்ல வலியுறுத்தி சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், அவிநாசி மோட்டாா் வாகன ஆய்வாளா் குமரன் தலைமையிலான அதிகாரிகள் செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவிநாசி, தெக்கலூா், பெருமாநல்லூா், செங்கப்பள்ளி வராமல் செல்வதாக புகாா் தெரிவிக்கப்பட்ட தனியாா் பேருந்தை நிறுத்திய அதிகாரிகள், அந்தப் பேருந்தின் ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் விசாரித்தனா்.
இதையடுத்து, இருவருக்கும் எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தனா்.