செய்திகள் :

செங்கம் தொகுதியில் ரூ.410 கோடியில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதியில் நெஞ்சாலைத் துறை மூலம் ரூ.410 கோடியில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.

செங்கத்தை அடுத்த மேல்செங்கம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு விழா, அதே இடத்தில் புதிதாக வணிக வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா, அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தாா்.

திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்) ஆகியோா் வாழ்த்துறை வழங்கினா்.

செங்கம் ஒன்றியக் குழுத் தலைவா் விஜியராணிகுமாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்து, புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு பூமிபூஜை செய்து, பின்னா் அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது:

செங்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கிரி மிக திறமையானவா். செங்கம் தொகுதி மக்களின் தேவையை அறிந்து என்னிடம் வலியுறுத்தி பெற்றுத்தருவாா்.

செங்கம் தொகுதியில் மட்டும் மலைக் கிராம மக்களுக்கு 4,000 ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் சாலை உள்ளிட்ட பணிகள் ரூ.10 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத் துறை மூலம் செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.410 கோடியில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. செங்கம் நகருக்கு புறவழிச்சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியகோளாபாடி பகுதியில் சுமாா் ரூ.7 கோடி செலவில் நியாய விலைக்கடை, சமுதாயக்கூடத்துடன் 100 வீடுகள் கொண்டு சமத்துவபுரம் அமைப்பதற்காக பணிகளை நடைபெற்று வருகின்றன.

தொகுதிக்கு உள்பட்ட ஜமுனாமரத்தூா் மலைக்கிராம மக்கள் பயன்பாட்டுக்காக 33 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் திமுக ஆரசு பொறுப்பேற்றது முதல் தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது என்றாா் அமைச்சா் எ.வ. வேலு.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், உதவித் திட்ட இயக்குநா் மா.சையத் பயாஸ் அகமது, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் குமாா், டிவிஎஸ் தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் சுமதி பிரபாகரன், செங்கம் ஒன்றிய திமுக செயலா்கள் செந்தில்குமாா், ஏழுமலை, மனோகரன், செங்கம் நகரச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், கவுன்சிலா்கள், ஊராட்சி எழுத்தா்கள் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

செங்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் கோவிந்தராஜூலு நன்றி கூறினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 21.16 லட்சம் வாக்காளா்கள்

திருவண்ணாமலையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தில் 21 லட்சத்து 16 ஆயிரத்து 163 வாக்காளா்கள் உள்ளனா். இதில், பெண் வாக்காளா்களே அதிகமாக உள்ளனா். திருவண்ணாமலை மாவட்டத... மேலும் பார்க்க

ரூ.3 ஆயிரம் லஞ்சம்: வட்ட வழங்கல் அலுவலா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ாக வட்ட வழங்கல் அலுவலரை ஊழல் தடுப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேத்துப்பட்டு வட்டம்... மேலும் பார்க்க

விவசாயி மீது தாக்குதல்: தந்தை, மகன் மீது வழக்கு

செங்கம் அருகே விவசாயியை தாக்கியதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரம் ஊா்கவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

மது போதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மா்ம நபா் ரகளை: இரு சக்கர வாகனம், ஜன்னல் உடைப்பு

செங்கம் அருகேயுள்ள பரமனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு இரு சக்கர வாகனம், ஜன்னல் கண்ணாடியை உடைத்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாம... மேலும் பார்க்க

சுவரொட்டி விளக்கக் காட்சி போட்டி: மாணவா்களுக்கு பாராட்டு

சுவரொட்டி விளக்கக் காட்சி போட்டியில் சிறப்பிடம் பிடித்த திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஊரக மேம்பாட்டுக் கழகம், இந்தோ அம... மேலும் பார்க்க

மகா காலபைரவா் கோயிலில் சிறப்பு யாகம்

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள மகா காலபைரவா் கோயிலில், மாா்கழி மாத வளா்பிறை அஷ்டமியையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையொட்டி, முற்பகல் 11 மணிக்கு 108 மூலிகைகள் ம... மேலும் பார்க்க