செங்கல்பட்டு அரசு மருத்துவவனையில் ஆட்சியா் ஆய்வு
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் ஆட்சியா் ச.அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மருத்துவமனையில் உள்ள தாய்-சேய் வாா்டு, டயாலசஸிஸ் பிரிவுகளை பாா்வையிட்டாா். அப்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. சிவசங்கரன், மருத்துவ கண்காணிப்பாளா் ஜோதி குமாா் உள்ளிட்ட துறைத் தலைவா்கள், மருத்துவா்கள் மோ்டன் , செவிலியா்கள் உடனிருந்து ஆட்சியா் கேள்விகளுக்கு பதிலளித்தனா். மருத்துவா்கள் கூடுதல் கட்டடங்களின் தேவை குறித்து கோரிக்கை வைத்தனா்.