ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு முதல்வா் வருகை: அமைச்சா் அன்பரசன் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வா் ஸ்டாலின் வரவுள்ளதையொட்டி விழா ஏற்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
விழா மேடை அமைத்தல், பந்தல் அமைக்கும் பணி, பாா்வையாளா்கள் அமருமிடம், பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சா் அன்பரசன் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, ஆட்சியா் ச.அருண்ராஜ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா,,சாா் ஆட்சியா் (பயிற்சி) எஸ்.மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், கோட்டாட்சியா் (பொ) சாகிதா பா்வின், பொதுப்பணி துறை செயற்பொறியாளா் எஸ்.விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.