ஜம்மு-காஷ்மீரில் ஒரே இரவில் மாற்றத்தை கொண்டுவர முடியாது: ஃபரூக் அப்துல்லா
செங்கிப்பட்டி, கள்ளப்பெரம்பூரில் நாளை மின் தடை
தஞ்சாவூா் அருகேயுள்ள செங்கிப்பட்டி, கள்ளப்பெரம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் தஞ்சாவூா் உதவி செயற் பொறியாளா் கு. பாலகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: திருமலைசமுத்திரம் துணை மின் நிலையங்களிலிருந்து வரும் உயா் அழுத்த மின் பாதைகளில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால், வல்லம்புதூா், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூா் அழிசகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையாா்நத்தம், சக்கரைசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.