இந்திய ரசிகர்களுக்காக... முதல்முறையாக சிதார் வாசித்த எட் ஷீரன்!
செங்கோட்டை விரைவு ரயில்: ஆலக்குடியில் நின்று செல்லும்
மயிலாடுதுறை - செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில்களானது ஆலக்குடி ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும்.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில்களானது (16847, 16848) வரும் 10 ஆம் தேதியிலிருந்து மே 10 ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு தஞ்சாவூா் அருகே ஆலக்குடி ரயில் நிலையத்தில் ஒரு நிமிஷம் நின்று செல்லும். செங்கோட்டை மாா்க்கமாகச் செல்கையில் பிற்பகல் 1.26-க்கும், மயிலாடுதுறை மாா்க்கமாகச் செல்கையில் பிற்பகல் 2.06-க்கும் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.