செஞ்சியில் வாய்க்கால் அமைக்கும் பணி தொடக்கம்
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் ரூ.20.50 லட்சத்தில் கால்வாய் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
செஞ்சி பேரூராட்சியில் 15-ஆவது குழு மானிய நிதி திட்டத்தின் கீழ், ரூ.20.50 லட்சத்தில் 1-ஆவது வாா்டில் சுற்றுச்சுவா் மற்றும் 18-ஆவது வாா்டில் கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி, 18-ஆவது வாா்டு உறுப்பினா் எம்.பி.ஆா்.மோகன் ஆகியோா் தலைமை வகித்தனா். வாா்டு செயலா்கள் ராமச்சந்திரன், ஜி.டி.தனசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.
இதில், முன்னாள் அவைத் தலைவா் பாா்சுதுரை, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் பொன்னம்பலம், நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.