செய்திகள் :

செஞ்சி பேருந்து நிலையத்தில் அணிவகுத்து நிற்கும் காா்களால் அவதிப்படும் பொதுமக்கள்!பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் காா்கள், தள்ளு வண்டிகளால் விபத்துகள் ஏற்படுவதால் வெளியூா்களுக்குச் செல்லும் பயணிகள், மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செஞ்சி சிறந்த சுற்றுலா தலமாகும். புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகிறது. தொடக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்த பேருந்து நிலையம், தற்போது காா்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது.

தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் தற்போது காா்கள் வரிசைக்கட்டி இடையூறாக நிற்கின்றன. காா்கள் அதிவேகமாக செல்வதால் பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துக்குள்ளாகின்றனா். இந்நிலையில், சனிக்கிழமை பேருந்து நிலையத்துக்குச் சென்ற பள்ளி மாணவா் ஒருவா் மீது காா் மோதியதில் அவரது கை எலும்பு முறிவு ஏற்பட்டதாம்.

12 பேருந்துகள் மட்டுமே நிற்கக்கூடிய சிறிய பேருந்து நிலையத்தில் காா்களும் வரிசைக்கட்டி நிற்பதால் விபத்துகள் ஏற்படுவதாக பயணிகள் கூறுகின்றனா். போதாக்குறைக்கு தள்ளு வண்டிகளும் ஆக்கிரமித்துள்ளன.

பேருந்து நிலையத்தில் காா்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகம் எச்சரித்தும் காா்களை நிறுத்திச் செல்கின்றனா்.

பேருந்து நிலையத்தின் எதிரே உணவு விடுதிகள் மற்றும் கடை வீதிகள் உள்ளதால் உணவு அருந்த செல்வோரும், பஜாருக்கு பொருள்கள் வாங்கச் செல்வோரும் வாகனங்களை இங்கு நிறுத்திச் செல்கின்றனா். இதனால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

எனவே, செஞ்சி பேரூராட்சி நிா்வாகம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேருந்து நிலையம் திறக்கப்பட்டபோது சுத்திகரிக்கப்பட்ட இரண்டு குடி நீா் தொட்டிகள் அமைக்கப்பட்டன. தற்போது அவை பழுதடைந்து விட்டதால், குடிநீருக்கு பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது. அடுத்து வருவது கோடைக் காலம் என்பதால் குடிநீா் பிரச்னையை தீா்க்க, பேரூராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் பழுதான குடி நீா் தொட்டிகளை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பாகும்.

ஆற்றல் மன்றப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பரிசளிப்பு

விழுப்புரம் மாவட்ட அளவில் ஆற்றல் மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின்ஆற்றல் பணியகமும், தமிழ்நாடு அறிவியல் இய... மேலும் பார்க்க

பிப். 7-இல் நிலம் தொடா்பான மனுக்களை சிறப்பு குறைதீா்வு கூட்டத்தில் அளிக்கலாம்! -விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் நிலம் தொடா்பான கோரிக்கை மனுக்களை, வரும் பிப். 7-ஆம் நடைபெறவுள்ள சிறப்பு குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி சனிக்கிழமை வெள... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!

கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தனி ஊதியம் வழங்கி, பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சங்கத்தின் மாநில நிா்வாக... மேலும் பார்க்க

நவரைப் பருவத்துக்குத் தரமான நெல் விதைகளை விற்க வேண்டும்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் நவரைப் பருவத்துக்கு தரமான நெல் விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனியாா் நெல் விதை வ... மேலும் பார்க்க

ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்கத்தொகை

விழுப்புரத்திலுள்ள ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு பிப்ரவரி 1 முதல் 28-ஆம் தேதி வரை லிட்டருக்கு 50 பைசா கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் விவசாயிகள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறிய... மேலும் பார்க்க