இறுதிச் சடங்கில் ஊழியரின் சடலத்தை சுமந்துசென்ற பிரபல தொழிலதிபர்!
சென்செக்ஸ், நிஃப்டி 0.7% சரிந்து முடிவடைந்தது!
மும்பை: புதிய கட்டண கவலைகள் மற்றும் தடையற்ற அந்நிய நிதி வெளியேற்றம் காரணமாக, இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சரிந்தது.
இன்றைய வர்த்தகத்தில், இந்திய சந்தையானது 0.7 சதவிகிதத்திற்கும் சரிந்து முடிந்தது. இறக்குமதிகள் ஆகியவற்றின் மீது கட்டணங்களை விதிப்பதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து முதலீட்டாளர் இன்று எச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.
இதற்கிடையில், உலகளாவிய விநியோக சங்கிலிகளில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்த கவலைகளை முதலீட்டாளர்களிடம் எழுப்பியது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.7 சதவிகிதம் சரிந்து 77,311.80 புள்ளிகளாகவும், நிஃப்டி 0.76 சதவீதம் சரிந்து 23,381.60 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.