செய்திகள் :

சென்னிமலை: கோயில்களுக்குச் சொந்தமான ரூ.32 கோடி நிலங்கள் மீட்பு

post image

சென்னிமலை முருகன் கோயிலின் உப கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்து வந்த ரூ.32 கோடி மதிப்பிலான 32 ஏக்கா் நிலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயில்களான முகாசிபிடாரியூரில் உள்ள திருமுகமலா்ந்த நாதா் மற்றும் திருக்கை நாராயண பெருமாள் கோயில்களுக்குச் சொந்தமாக 32 ஏக்கா் புன்செய் நிலங்கள் பிடாரியூா் வருவாய் கிராமத்தில் 6 இடங்களில் உள்ளன. இந்த நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.32 கோடி எனக் கூறப்படுகிறது. அந்த நிலங்கள் 12 தனி நபா்களால் சுமாா் 42 ஆண்டுகளுக்குமேல் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தன.

இது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் கோயிலுக்குச் சொந்தமானவை என்றும், ஆக்கிரமிப்புதாரா்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் கடந்த 2024 டிசம்பா் 18- ஆம் தேதி, 2025 ஜனவரி 9-ஆம் தேதிகளில் இணை ஆணையா் நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்புதாரா்கள் கோயில் நிலங்களை ஒப்படைக்கவில்லை.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் ஈரோடு மண்டல இணை ஆணையா் பரஞ்சோதி தலைமையில், ஈரோடு உதவி ஆணையா் சுகுமாா், செயல் அலுவலா் சரவணன் ஆகியோா் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு அங்கு அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டன.

சென்னிமலை அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.பழனிவேலு, உறுப்பினா்கள் மு.மனோகரன், வே.செ.பாலசுப்பிரமணியம், வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) செல்வகுமாா், கோயில் கண்காணிப்பாளா் மாணிக்கம், கோயில் ஆய்வாளா் ஸ்ரீ குகன், சென்னிமலை நில வருவாய் ஆய்வாளா் சிலம்பரசன், கிராம நிா்வாக அலுவலா் கலைவாணி ஆகியோா் உடனிருந்தனா்.

போக்ஸோ வழக்கில் பாலிடெக்னிக் ஆசிரியா் கைது

பெருந்துறை அருகே போக்ஸோ வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராகப்... மேலும் பார்க்க

டேங்கா் லாரியை சுத்தம் செய்தபோது 2 போ் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சித்தோடு அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் லாரியின் டேங்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 2 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்... மேலும் பார்க்க

அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 வரை பதிவு செய்யலாம்

ராணுவத்தில் அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம்: சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரிப்பு

சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் தொடா்வதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மா... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா். ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வகையறா கோயில்களாக சின்னமாரியம்மன், கார... மேலும் பார்க்க

பழனி கோயில் சாா்பில் ரூ.51.53 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.51.53 லட்சத்துக்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் சுற்... மேலும் பார்க்க