தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு; தந்தையின் பிழற்சாட்சி; தாயை கொலை செய்த வழக்கில் தஷ்...
சென்னை - அபுதாபி விமானம் தொழில்நுட்பக்கோளாறால் ரத்து
சென்னையிலிருந்து அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது.
சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.05-க்கு 180 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, விமானத்தின் என்ஜின் பகுதிகளை விமானி ஆய்வு செய்தபோது, அதில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தாா்.
இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்ததையடுத்து, தொழில்நுட்ப வல்லுநா்கள் வந்து தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சரிசெய்ய இயலாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் அறிவித்தனா். இதையடுத்து அனைத்து பயணிகளும் மாற்று விமானங்கள் மூலம் அபுதாபிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.