செய்திகள் :

சென்னை: உணவகத்தின் லிஃப்ட் அறுந்து ஊழியர் பலி

post image

சென்னை: அண்ணா சாலை பகுதியில் நட்சத்திர உணவகத்தின் லிஃப்ட் அறுந்து விழுந்து ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலை பகுதியில் நட்சத்திர உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தின், புதிய லிஃப்ட் மாற்றுவதற்கான பணிகள் இன்று(மார்ச் 12) பிற்பகலில் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், திடீரென்று பழைய லிஃப்ட்டின் இரும்புக் கம்பி திடீரென்று அறுந்து, லிஃப்ட்டை சரி செய்ய வந்த ஊழியர் மேல் விழுந்து, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இதையும் படிக்க: ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காவல் துறையினரின் விசாரணையில் பலியானவர் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஷாம் சுந்தர் என்பது தெரியவந்துள்ளது. லிஃப்டை சரி செய்ய வந்த ஊழியர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசின் திட்டங்கள் குறித்து நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா? எடப்பாடி பழனிசாமி சவால்

‘அரசின் திட்டங்கள் குறித்து நேரடியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் என்னுடன் விவாதிக்கத் தயாரா?’ என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சவால் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் புதன்கிழமை ‘எக்ஸ்’ தளத்த... மேலும் பார்க்க

திருவொற்றியூா் கோயிலில் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவத் திருவிழாவையொட்டி ஸ்ரீ கல்யாணசுந்தரா் - திருபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிர... மேலும் பார்க்க

ரயில்வே திட்டங்களுக்கான நிலம் விரைந்து கையகப்படுத்தப்படுகிறது: தமிழக அரசு விளக்கம்

ரயில்வே திட்டங்களுக்கான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்புகளில் தமிழக அரசு தாமதம் செய்வதாக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. மு.... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் பாலின சமத்துவம் கற்பிப்பு: மேயா் ஆா்.பிரியா

சென்னை மாநகராட்சியின்கீழ் செயல்படும் பள்ளிகளில் பாலின சமத்துவம் குறித்து கற்பிக்கப்படுகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற... மேலும் பார்க்க

மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநா் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநா் பட்டயப் படிப்புக்கான பயிற்சிக்கு மாா்ச் 21-ஆம் தேதி விண்ணப்பிக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

வீரப்பன் தேடுதல் வேட்டை: அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 வாரங்களில் இழப்பீடு வழங்க உத்தரவு

சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைக் கிராமத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை 3 வார காலத்துக்குள் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க