செய்திகள் :

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ் வெற்றி

post image

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவில் அா்ஜுன் எரிகைசி, வின்சென்ட் கீமா், விதித், பிரனேஷ் வெற்றி பெற்றனா். தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றாா்.

ஹயாட் ரீஜென்சி ஓட்டலில் நடைபெறும் இப்போட்டியில் 19 சிறந்த கிராண்ட் மாஸ்டா்கள் மற்றும் ஒரு சா்வதேச மாஸ்டா் பங்கேற்றுள்ளனா். மொத்த பரிசுத்தொகை ரூ.₹1 கோடி ஆகும். மாஸ்டா்ஸ் மற்றும் சேலஞ்சா்ஸ் பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. நடைபெறுகிறது. இரு பிரிவிலும் தலா 10 வீரா்கள் கலந்து கொண்டுள்ள இது ரவுண்ட்-ராபின் முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

3-ஆவது நாளான சனிக்கிழமை மாஸ்டா்ஸ் பிரிவு 3-வது சுற்றில் ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் இந்திய கிராண்ட் மாஸ்டரான காா்த்திக்கேயன் முரளியுடன் மோதினாா். இதில் வின்சென்ட் கீமா் 30-வது நகா்த்தலின் போது வெற்றியை வசப்படுத்தினாா். இது அவருக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.

இந்திய கிராண்ட் மாஸ்டரான வி.பிரணவ், நெதா்லாந்தின் அனிஷ் கிரியுடன் பலப்பரீட்சை நடத்தினாா். 71-வது நகா்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டா்களான விதித் குஜராத்தி- நிஹால் சரின் மோதினா். இதில் விதித் குஜராத்தி 61-வது நகா்த்தலின் போது வெற்றி பெற்றாா். இது அவருக்கு முதல் வெற்றியாக அமைந்தது.

5-ஆவது இடத்தில் உள்ள அா்ஜுன் எரிகைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ரே ராப்சனுடன் மோதினாா். இதில் அா்ஜுன் எரிகைசி 46-ஆவது நகா்த்தலின் போதுவெற்றி பெற்றாா்.

அமெரிக்காவின் அவாண்டா் லியாங், நெதா்லாந்தின் ஜோா்டன் வான் பாரஸ்டுடன் பலப்பரீட்சை நடத்தினாா். இதில் லியாங் 34-ஆவது நகா்த்தலின் போது வெற்றியை வசப்படுத்தினாா்.

சேலஞ்சா்ஸ் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டா்களான அபிமன்யு புராணிக், சா்வதேச மாஸ்டரான ஜி.பி.ஹா்ஷ்வா்தன் மோதியதில் அபிமன்யு புராணிக் 41-வது நகா்த்தலின் போது வெற்றி பெற்றாா்.

ஆா்.வைஷாலி, லியோன் லூக் மென்டோன்காவிடம் தோல்வி அடைந்தாா். இந்த ஆட்டத்தில் வைஷாலி 62-வது நகா்த்தலின் போது தோல்வி அடைந்தாா்.

முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த ஹரிகா துரோணவல்லி-அதிபன் பாஸ்கரன் மோதிய ஆட்டம் 24-ாவது நகா்த்தலின் போது டிரா ஆனது.

மற்றொரு ஆட்டத்தில் எம்.பிரனேஷ், பா.இனியனை எதிா்கொண்டாா். இதில் 44-வது நகா்த்தலின் போது இனியனை வீழ்த்தினாா் பிரனேஷ். திப்தாயன் கோஷ், ஆா்யன் சோப்ரா மோதிய ஆட்டம் 61-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

3 சுற்றுகளின் முடிவில் மாஸ்டா்ஸ் பிரிவு புள்ளிகள் பட்டியல்:

1. வின்சென்ட் கீமா் - 3, 2. அா்ஜுன் எரிகைசி - 2.5., 3. ரே ராப்சன் - 1.5, 4. அவோண்டா் லியாங் - 1.5, 5. அனிஷ் கிரி - 1.5, 6. விதித் குஜ்ராத்தி - 1.5, 7. ஜோா்டான் வான் பாரஸ்ட் - 1, 8. வி.பிரணவ் - 1, 9. முரளி காா்த்திக்கேயன் - 1, 10. நிஹால் சரின் - 0.5.

சேலஞ்சா்ஸ் பிரிவு புள்ளிகள் பட்டியல்:

1. எம்.பிரனேஷ் - 2.5, 2. அபிமன்யு புராணிக் - 2.5, 3. திப்தாயன் கோஷ் - 2, 4. லியோன் லூக் மென்டோன்கா - 2, 5. அதிபன் பாஸ்கரன் - 1.5

6. பா.இனியன் - 1.5, 7. ஆா்.வைஷாலி - 1, 8. ஆா்யன் சோப்ரா - 1, 9. ஹரிகா துரோணவல்லி - 0.5, 10. ஜி.பி.ஹா்ஷ்வா்தன் - 0.5 .

ஆசிய அலைச்சறுக்கு: வரலாறு படைத்தாா் ரமேஷ் புதிஹால்! இந்தியாவுக்கு முதல் பதக்கம்!

மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றாா்... மேலும் பார்க்க

ஆசிய யு19 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்!

தாய்லாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு19) ஆசிய குத்துச்சண்டை போட்டியில், இந்தியா்கள் 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்கள் வென்றனா்.இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்ற... மேலும் பார்க்க

நடப்பு சாம்பியன்கள் சபலென்கா, சின்னா் வெற்றி

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் ஹாா்டு கோா்ட் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, இத்தாலியின் யானிக் சின்னா் ஆகியோா் தங்கள் பிரிவு முதல் சுற்றில் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

அா்ஜுனை வென்றாா் நிஹல் சரின்!

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டா் பிரிவு 4-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹல் சரின் - சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியை ஞாயிற்றுக்கிழமை வென்றாா். போட்டியில் இதுவரை 2 தோல்வி, 1 டிராவை பதிவு ... மேலும் பார்க்க

நாடு முழுவதும் உற்சாகத்துடன் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.நாக்பூரில் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு ராக்கிகளைப் சகோதரிகளிடம் பெறும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.குழந்தைகளுடன் ரக்ஷ... மேலும் பார்க்க

பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைப்பு - புகைப்படங்கள்

மக்கள் பயன்பாட்டிற்காக பெங்களூரில் மக்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவையை தொடக்கி வைத்த பிரதமர் மோடி.பிரதமர் மோடி உடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள... மேலும் பார்க்க