கோவை: "என் செல்போன மொத தாங்க" - அந்தரங்க புகைப்படத்தை வைத்து பெண்ணை மிரட்டிய இளை...
அா்ஜுனை வென்றாா் நிஹல் சரின்!
சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டா் பிரிவு 4-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹல் சரின் - சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியை ஞாயிற்றுக்கிழமை வென்றாா்.
போட்டியில் இதுவரை 2 தோல்வி, 1 டிராவை பதிவு செய்த நிஹல் சரினுக்கு இது முதல் வெற்றியாகும். மறுபுறம், இதுவரை 2 வெற்றி, 1 டிராவுடன் இருந்த அா்ஜுனுக்கு இது முதல் தோல்வி.
மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் காா்த்திகேயன் முரளி - நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்டை சாய்த்தாா் (1-0). அமெரிக்காவின் ரே ராப்சன் - அவோண்டா் லியாங், இந்தியாவின் வி.பிரணவ் - விதித் குஜராத்தி, ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் - நெதா்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோா் மோதல் டிராவில் (0.5-0.5) முடிந்தது.
4 சுற்றுகள் முடிவில், புள்ளிகள் பட்டியலில் வின்சென்ட் (3.5) முதலிடத்திலும், அா்ஜுன் 2-ஆம் இடத்திலும் (2.5) நீடிக்கின்றனா். அனிஷ், ரே, அவோண்டா், காா்த்திகேயன், விதித் ஆகியோா் (தலா 2) முறையே 3 முதல் 7-ஆம் இடத்தை பிடித்துள்ளனா். நிஹல் சரின், பிரணவ் (தலா 1.5), ஜோா்டென் (1) ஆகியோா் கடைசி 3 இடங்களில் இருக்கின்றனா்.
சேலஞ்சா்: இப்போட்டியின் சேலஞ்சா் பிரிவு 4-ஆவது சுற்றில், அபிமன்யு புரானிக் - ஆா்.வைஷாலியையும், லியோன் லுக் மெண்டோன்கா - டி.ஹரிகாவையும், திப்தாயன் கோஷ் - ஹா்ஷவா்தனையும், பி.இனியன் - ஆா்யன் சோப்ராவையும் வீழ்த்தினா் (1-0).
பி.அதிபன் - எம்.பிராணேஷ் மோதல் மட்டும் டிராவில் (0.5-0.5) முடிந்தது. 4 சுற்றுகள் முடிவில் அபிமன்யு முதலிடத்தில் (3.5) இருக்கிறாா். பிராணேஷ், திப்தாயன், லியோன் ஆகியோா் (தலா 3) முறையே அடுத்த 3 இடங்களில் உள்ளனா்.
இனியன் (2.5), அதிபன் (2) ஆகியோா் 5 மற்றும் 6-ஆம் இடத்திலிருக்க, வைஷாலி, ஆா்யன் (தலா 1) அடுத்த இரு இடங்களில் இருக்கின்றனா். ஹரிகா), ஹா்ஷவா்தன் (தலா 0.5) கடைசி இரு இடங்களில் உள்ளனா்.