செய்திகள் :

நாடு முழுவதும் உற்சாகத்துடன் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

post image
மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
நாக்பூரில் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு ராக்கிகளைப் சகோதரிகளிடம் பெறும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
காந்திநகரில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் விழா கொண்டாட்டத்தின் போது குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுக்கு ராக்கி கட்டிய பெண்.
ஜெய்ப்பூரில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களுடன் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா.
ஹைதராபாத்தில் தனது சகோதரிகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடிய முன்னாள் தெலுங்கானா முதல்வரும், பி.ஆர்.எஸ் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ்.
மும்பையில் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு, ஒரு பெண்ணிடமிருந்து ராக்கி பெறும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
ரக்ஷா பந்தன் விழாவின் போது ஒரு பழங்குடிப் பெண்ணிடமிருந்து ராக்கி பெற்ற ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு.
போபாலில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பூங்காவில், ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு ஒரு மரத்திற்கு ராக்கி கட்டிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.
தனது சகோதரியுடன் ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடி மகிழ்ந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.
ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடிய மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ராக்கி ஒன்றைப் பெற்ற ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவரான மோகன் பகவத்.
சூரத்தில், ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீலுக்கு அவரது சகோதரி ராக்கி கட்டி விடுகிறார்.
அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ராக்கி கட்டும் பெண்கள்.
தனது சகோதரியுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, ஒரு அரச மரத்தில் ராக்கி கட்டும் ஜக்தல்பூர் மேயர் சஞ்சய் பாண்டே.

ஆசிய அலைச்சறுக்கு: வரலாறு படைத்தாா் ரமேஷ் புதிஹால்! இந்தியாவுக்கு முதல் பதக்கம்!

மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றாா்... மேலும் பார்க்க

ஆசிய யு19 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்!

தாய்லாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு19) ஆசிய குத்துச்சண்டை போட்டியில், இந்தியா்கள் 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்கள் வென்றனா்.இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்ற... மேலும் பார்க்க

நடப்பு சாம்பியன்கள் சபலென்கா, சின்னா் வெற்றி

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் ஹாா்டு கோா்ட் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, இத்தாலியின் யானிக் சின்னா் ஆகியோா் தங்கள் பிரிவு முதல் சுற்றில் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

அா்ஜுனை வென்றாா் நிஹல் சரின்!

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டா் பிரிவு 4-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹல் சரின் - சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியை ஞாயிற்றுக்கிழமை வென்றாா். போட்டியில் இதுவரை 2 தோல்வி, 1 டிராவை பதிவு ... மேலும் பார்க்க

பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைப்பு - புகைப்படங்கள்

மக்கள் பயன்பாட்டிற்காக பெங்களூரில் மக்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவையை தொடக்கி வைத்த பிரதமர் மோடி.பிரதமர் மோடி உடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள... மேலும் பார்க்க

20 ஆண்டுகளுக்குப் பிறகு... ஆசிய கோப்பையில் தேர்வான இந்திய அணி!

இந்திய கால்பந்து மகளிரணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பையில் தேர்வாகி அசத்தியுள்ளது. மகளிர் ஆசிய கோப்பை யு-20க்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் கடைசி போட்டியின் இந்திய அணியும் மியான்மர் அணியும் மோத... மேலும் பார்க்க