செய்திகள் :

சென்னை சென்ட்ரல் கோபுரம் மேம்பாட்டுக்கு ரூ.349 கோடியில் ஒப்பந்தம்

post image

சென்னை சென்ட்ரல் கோபுரத்தின் மேம்பாட்டிற்கான கட்டுமானம், கட்டடக்கலை, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் போன்ற பணிகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் போன்ற பணிகளுக்கு ரூ.349.99 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO)இணைந்து உருவாக்கிய சிறப்பு நோக்கத்திற்கான நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம்(CMAML), பிரபலமான சென்னை சென்ட்ரல் கோபுரத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் ரிநாட்டஸ் பிராஜக்ட் நிறுவனத்திற்கு ரூ. 349.99 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பு கடிதம் (LOA) 12.12.2024 அன்று வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் / சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் ரிநாட்டஸ் பிராஜக்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.மனோஜ் பூசப்பன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும்வடிவமைப்பு), ஜி.தணிகைசெல்வன் (திட்ட மேலாளர்),சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை சென்ட்ரல் கோபுரம் உலகளாவிய பெருநகரமாகவும், பன்முக போக்குவரத்து மையமாகவும் மாறுவதை குறிக்கும் ஒரு முக்கியமான திட்டமாகும்.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அருகில் அமையவுள்ள இந்த 27 மாடிக் கட்டடம் தொடர்புகள், தற்போதைய வசதிகள் மற்றும் நிலையான பராமரிப்பு முறைகள் அனைத்தையும் இணைக்கும் வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சென்னை சென்ட்ரல் கோபுரம், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்கள், ஆற்றல் திறன்மிக்க அமைப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியது, நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கான முன்னோடியாக அமைந்துள்ளது.

சென்னை சென்ட்ரல் கோபுரம் ஒரு முக்கியமான செயல்பாட்டு மையமாக கருதப்படுகிறது. வணிகம், ஓய்வு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றுக்கு கவனமாக வடிவமைக்கப்பட்டஇடங்களை வழங்கும் இந்த கோபுரம், குடியிருப்பாளர்கள், பயணிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வருகை தரும் பார்வையாளர்களுக்கு ஒரு இணக்கமான சூழலை உருவாக்கும். அதன் அதிநவீன உள்கட்டமைப்பு நகரத்தின் இணைப்பு, பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த சென்னை சென்ட்ரல் கோபுரம், வளர்ச்சி, புதுமை மற்றும் வாய்ப்புகளை குறிக்கிறது. இது நகரத்தின் லட்சியத்தையும் மாற்றத்தையும் குறிக்கும் ஒரு பெருமை மிக்க அடையாளமாக திகழ்கிறது.

குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே

குடியரசு நாளையொட்டி ஜன. 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஜன. 24) இரவு 10.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்... மேலும் பார்க்க

பெண்களிடம் விரும்பத்தகாத சொல், செயல்கூட பாலியல் துன்புறுத்தல்தான்: உயர் நீதிமன்றம்

பெண்களிடம் விரும்பத்தகாத சொல், செயல்களும்கூட பாலியல் துன்புறுத்தல்தான் என்று சென்னை தனியார் நிறுவன மேலாளர் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார்.சென்னை அம்பத்தூரில் ஒரு தனியார் ... மேலும் பார்க்க

மக்களின் உணர்வுக்கு மத்திய அரசு பணிந்துள்ளது: மு.க. ஸ்டாலின்

மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத... மேலும் பார்க்க

அரிட்டாபட்டி மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள்: அண்ணாமலை

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மதுரை அரிட்டாபட்டி மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, அரிட்... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பார்க்க

கல்வி உதவித் தொகை என்ற பெயரில் மோசடி! மக்களே எச்சரிக்கை!

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாக மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலம் மோசடி நடப்பதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக வங்கிக் கணக்கு எண், ஓடிபி கேட்கும்... மேலும் பார்க்க