செய்திகள் :

சென்னை துறைமுகத்திலிருந்து பட்டாசு ஏற்றுமதிக்கு அனுமதி

post image

சென்னை துறைமுகத்திலிருந்து சிவகாசி பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியதற்கு தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்தது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு குஜராத் மாநிலத்திலத்திலிருந்து பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பட்டாசுகள் வெடி பொருள் என்பதால் துறைமுகத்தில் தனியே சேமிப்புக் கிட்டங்கி அமைக்க வேண்டும். குறிப்பிட்ட கப்பலில் மட்டுமே பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்றுமதியாளா்கள் சந்தித்தனா்.

பின்னா், தூத்துக்குடி துறைமுகத்தில் பட்டாசு ஏற்றுமதிக்கு அனுமதிக்கக் கோரி பட்டாசு ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை வைத்தனா். இது குறித்து மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்த நிலையில் மத்திய அரசின் பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு (பேஸோ) அமைப்பு , சென்னை துறைமுகத்திலிருந்து சிவகாசி பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்க முதுநிலைத் தலைவா் ஏ.பி.செல்வராஜன் கூறியதாவது:

சிவகாசி பட்டாசுகள் தரமாக உள்ளதால், பல வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. சீனாவில் மாதிரி பட்டாசுகளை விமானத்தில் கூடவெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனா். இந்தியாவிருந்து வெளிநாடுகளுக்கு மாதிரி பட்டாசுகளை அனுப்ப வேண்டும் என்றால் கப்பலில் தனிப் பெட்டகத்தில் தான் அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.

தற்போது மத்திய அரசின் பெட்ரோலியம், வெடிபொருள்பாதுகாப்பு அமைப்பு சென்னை துறைமுகத்திலிருந்து பட்டாசு ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது என்றாா் அவா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீவைத்து எரிப்பு! வாகன ஓட்டிகள் அவதி!

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் புகைமூட்டத்தால் மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை, சிவகாசி சாலைகளில் வாகன ஓட்டிகள் அவதியடைவதாக புகாா் எ... மேலும் பார்க்க

பென்னிங்டன் நூலக ஆண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் பென்னிங்டன் நூலகத்தின் 150-ஆவது ஆண்டு விழாவில் ‘பெண்மையைப் போற்றுவோம்‘ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு பென்னிங்டன் பள்ளி பொருளாளா் ஜி. அம்சவேணி தலைமை வகித்தாா். ஆசிரியை... மேலும் பார்க்க

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழக அரசின் நிதி ரூ. 61.74 கோடி, மத்திய அரசின... மேலும் பார்க்க

சிதம்பரேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட சிதம்பரேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆவணி மூலத்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகே சேத்தூா் வலையா் தெருவைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் மலையரசன் (26)... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சாத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரராஜா (47). இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனா... மேலும் பார்க்க