செய்திகள் :

சென்னை: தொழிலதிபர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு... நேபாள டிரைவர் கைது - அதிர்ச்சி பின்னணி!

post image

சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சுலைமான் (67). இவர் கடந்த 21.12.2024-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். பின்னர் 3.1.2025-ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த சுலைமான் குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 1.50 கிலோ கிராம் தங்க நகைகள், 50 கேரட் வைர நகைகள், 10 லட்சம் ரூபாய், லேப்டாப், ஐபோன், 3 விலை உயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தன. இதையடுத்து சுலைமான், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குபதிந்து சி.சி.டி.வி கேமராக்கள், செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

நகைகள்

இந்த நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த சந்திர பரேயர் (31) என்பவர், சுலைமான் வீட்டில் டிரைவராக வேலை செய்து வந்தார். திருட்டு சம்பவம் நடந்த பிறகு சந்திர பரேயரும் மாயமாகியிருந்தார். அதனால் அவர் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. அதனால் சந்திரபரேயரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சந்திர பரேயர், தன்னுடைய உறவினர்களை நேபாளத்திலிருந்து சென்னைக்கு வரவழைத்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதனால் அவரை போலீஸார் கைது செய்ததோடு 14.3 கிராம் எடையுள்ள தங்க நகைகளை மீட்டனர் . மீதமுள்ள நகைகள், வைர நகைகள் சந்திர பரேயரின் கூட்டாளிகளிடம் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் நேபாளத்தில் முகாமிட்டிருக்கிறார்கள்.

இது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``சுலைமான் சென்னையில் பிசினஸ் செய்து வருகிறார். தொழிலதிபரான சுலைமான், குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குப் புறப்பட்டு சென்றிருக்கிறார். இவரின் வீட்டில் அண்மையில் நேபாளத்தைச் சேர்ந்த சந்திர பரேயர் டிரைவராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். வேலைக்கு சேர்ந்து சில தினங்கள் ஆனதால் சொந்த ஊருக்கு அவரை சுலைமான் அழைத்துச் செல்லவில்லை. அதனால் சந்திர பரேயரும் தானும் சொந்த மாநிலத்துக்கு செல்வதாக தொழிலதிபர் சுலைமானிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். பின்னர் தன்னுடைய உறவினர்கள் ,கூட்டாளிகளை சென்னைக்கு வரவழைத்து வீட்டின் பூட்டை உடைத்து திருடியிருக்கிறார். கைது செய்யப்பட்ட சந்திர பரேயர், ஏற்கெனவே ஒரு தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் தி.மு.க ஆதரவாளர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் கண்... மேலும் பார்க்க

கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கியது எப்படி?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், டாக்டர் மூா்த்தி சாலையைச் சேர்ந்தவர் சார்லஸ் (63). இவர் கடந்த ஜனவரி 8ம் தேதி, தனது மகனைச் சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காகக் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கு குடும்பத்துடன் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரின் மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு நான்கு ஆண், ஒரு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்க... மேலும் பார்க்க

மதுரை: கலெக்டர், காவல்துறையினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயிலில் திருட்டு; போலீஸ் தீவிர விசாரணை

கலெக்டர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியிலுள்ள கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலீஸ் விசாரணைமதுரை ரேஸ்கோர்ஸ... மேலும் பார்க்க

`கோவை MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?'- காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு MyV3Ads என்ற நிறுவனம் இயங்கி வந்தது. செல்போனில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நூதன விளம்பரம் செய்தது. இதற்காக பல்வேறு பிரிவுகளில் திட்டங்களை அறிமு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க