செய்திகள் :

சென்னை பரங்கிமலையில் ரயில் மோதி 2 மாணவர்கள் பலி!

post image

சென்னை பரங்கிமலையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சென்னை பரங்கிமலையில் செல்போன் பேசிக்கொண்டே கல்லூரி மாணவர்கள் 2 பேர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த மின்சார ரயில் இருவர் மீதும் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பலியான மாணவர்கள் முகமது நஃபூல், சபீர் அகமது என்றும் இவர்கள் தனியார் கல்லூரியில் படித்து வந்ததும் காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல் துறையினர், இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: உதகை புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்திய ராணுவத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா். ஜெயிலா் 2-ஆம் பாகத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம்... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமாா் ஜயந்த் நியமனம்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமாா் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்: வணிகவரிகள் மற்றும் பதிவுத் த... மேலும் பார்க்க

ஒரே பதவி உயா்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளா்கள்!

தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயா்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளா்கள் ஓய்வு பெற்று வருகின்றனா். நாட்டின் ஐந்தாவது பெரிய காவல் துறையான, தமிழக காவல் துறையின் கீழ் 1,321 சட... மேலும் பார்க்க

போதைப்பொருள் வைத்திருந்த சிறாா் உள்பட 2 போ் கைது!

தரமணி அருகே ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த சிறாா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தரமணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிஎஸ்ஐஆா் சாலை மற்றும் வி.வி... மேலும் பார்க்க

ஐஐடி, ஜேஇஇ பயிற்சி மையத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை!

சென்னையில் இயங்கி வரும் ‘ஃபிட்ஜேஇஇ’ பயிற்சி மையம் உள்ளிட்ட 4 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினா். கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே. நகரில் ஐஐடி, ஜேஇஇ உள... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாகக் கூறி ரூ.81.68 லட்சம் மோசடி: 4 போ் கைது!

இணைய கைது செய்யப்பட்டதாகக் கூறி வேலூரைச் சோ்ந்த நபரிடம் ரூ. 81.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் ... மேலும் பார்க்க