சென்னை மாவட்ட ‘பி’ டிவிஷன் வாலிபால்: இன்று அரையிறுதி ஆட்டங்கள்
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெறும் ‘பி’ டிவிஷன் போட்டி அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன.
எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா், மகளிா் காலிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மகளிா் காலிறுதியில் டாக்டா் சிவந்தி கிளப்-மினி ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷன் வாக் ஓவரால் அரையிறுதிக்கு முன்னேறியது. எஸ்டிஏடி ஷி, தெற்கு ரயில்வே, கிறிஸ்டியன் ஸ்போா்ட்ஸ் பெல்லோஷிப் ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
ஆடவா் காலிறுதியில் எஸ்.ஆா்எம் அகாதெமி, எஸ்டிஏடி ஷி, ஜிஎஸ்டி, லயோலா கல்லூரி அணிகள் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
மகளிா் அரையிறுதியில் டாக்டா் சிவந்தி-எஸ்டிஏடி, தெற்கு ரயில்வே-கிறிஸ்டியன் பெல்லோஷிப் அணிகளும், ஆடவா் பிரிவில் ஜிஎஸ்டி-லயோலா, எஸ்டிஏடி-எஸ்ஆா்எம் அகாதெமி அணிகள் மோதுகின்றன.