செய்திகள் :

செப். 13-இல் பிரதமா் மோடி மணிப்பூா் பயணம்- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

post image

வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூா் மற்றும் மிஸோரத்துக்கு செப்.13-இல் பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

மணிப்பூரில் கடந்த 2023, மே மாதம் முதல் மைதேயி மற்றும் குகி பழங்குடியினா் இடையே பெரும் கலவரம் வெடித்த பிறகு முதல்முறையாக பிரதமா் மோடி மணிப்பூருக்கு பயணிக்கிறாா். அங்கு பைரபி-சாய்ராங் ரயில்வழித்தடத்தை அவா் திறந்துவைக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

2023-இல் இருந்து மைதேயி மற்றும் குகி பழங்குடியினா் இடையே அவ்வப்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களில் தற்போது வரை 260 போ் உயிரிழந்தனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் அவா் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அரசமைப்புச் சட்டப் பிரிவு 356-இன்கீழ் அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான தீா்மானம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இந்நிலையில், மணிப்பூா் மற்றும் மிஸோரத்துக்கு பிரதமா் மோடி செப்.13-இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பைரபி-சாய்ராங் ரயில்வழித்தடத்தை திறந்து வைக்கவுள்ளதாக மிஸோரம் மாநில அதிகாரிகள் தெரிவித்தனா். இருப்பினும், இதுகுறித்த அதிகாரபூா்வ தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

மணிப்பூரில் ஆலோசனைக் கூட்டம்: பிரதமா் மோடியின் சுற்றுப்பயணத்தை மணிப்பூா் மாநில அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், கடந்த ஆக.30-ஆம் தேதி மாநில தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் உயரதிகாரிகள் பங்கேற்ாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘ஆலோசனைக் கூட்டத்தின்போது மணிப்பூருக்கு வரவுள்ள சிறப்பு விருந்தினருக்கு பிரம்மாண்டமான வரவேற்பளிக்கவும், பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலா் அறிவுறுத்தினாா். இதையடுத்து, செப். 7 முதல் 14 வரை தவிா்க்க முடியாத சில காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் விடுமுறை எடுக்கக் கூடாது என போலீஸாருக்கு காவல் துறைத் தலைவா் ஆக.30-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா்.

முக்கிய விருந்தினரின் வருகையின்போது புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் திறந்துவைக்கப்பட்டு சில புதிய திட்டங்களும் தொடங்கப்படவுள்ளன’ என்றனா்.

காலம் தாழ்ந்த செயல்: காங்கிரஸ் விமா்சனம்

புது தில்லி, செப். 2: பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் காலம் தாழ்ந்த செயல் என காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை விமா்சித்தது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘கடந்த இரண்டரை ஆண்டுகளில் உலகின் பல நாடுகளுக்கும், மணிப்பூருக்கு அருகில் உள்ள அஸ்ஸாம் மற்றும் அருணாசல பிரதேசத்துக்கும் பிரதமா் மோடி பயணித்துள்ளாா். ஆனால், மணிப்பூருக்குச் செல்ல அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இறுதியாக அங்கு செல்ல துணிந்துள்ளாா்.

இத்தனை நாள்களாக மணிப்பூா் மக்களை அவா் முழுவதுமாக புறக்கணித்துவிட்டாா். இத்துடன் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் செயலற்ற நிலையால் மணிப்பூா் மக்கள் கடும் வேதனைக்கு உள்ளாயினா். நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சூழலில் பிரதமா் அங்கு பயணிப்பது மிகவும் காலம் தாழ்ந்த செயல்’ எனக் குறிப்பிட்டாா்.

பஞ்சாப் வெள்ளம்! 5,500 மக்கள், 300 துணை ராணுவ வீரர்கள் மீட்பு!

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 300 துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் 5,500 மக்கள், ராணுவப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.பஞ்சாபில், பெய்த கனமழையால் காகர் நதியின் நீர... மேலும் பார்க்க

சாலையில் நடனம்: அராஜகத்தை ஊக்குவிக்கிறார் தேஜஸ்வி - பாஜக

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விதிமுறைகளுக்கு மாறாக சாலையில் நடனமாடி அராஜகத்தை ஊக்குவிப்பதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. மேலும், கட்சியின் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டிய... மேலும் பார்க்க

ம.பி: அரசு மருத்துவமனையில் எலி கடித்து மற்றொரு பச்சிளம் குழந்தை பலி!

மத்தியப் பிரதேசத்தின், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலி கடித்து படுகாயமடைந்த, மற்றொரு பச்சிளம் குழந்தையும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தூர் மாவட்டத்தில் உள்ள, மஹாராஜா யஷ்வந்த் ராவ் அரசு மருத... மேலும் பார்க்க

ரீல்ஸ் விடியோவுக்கு நடனமாடிய தேஜஸ்வி யாதவ்!

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், இளைஞர்களுடன் இரவுச் சாலையில் நடனமாடிய விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில், பாடலுக்கு ஏற்பவும் இளைஞர்களின் நடன அசைவுகளுக்கு ஏற்பவும் த... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம் பேரிடராக அறிவிப்பு! 30 பேர் பலி!

பஞ்சாபை பேரிடர் பாதித்த மாநிலமாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இன்று வரை 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தால் 1,400 கிராமங்களைச் சேர்ந்த 3.55 லட... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் தீவிரமடையும் கனமழை! 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின், மூன்று மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஏரா... மேலும் பார்க்க