செப்.16-இல் செய்யாறில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
செய்யாறில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் செவ்வாய்கிழமை (செப்.16) நடைபெறுகிறது.
இதுகுறித்து செய்யாறு சாா் - ஆட்சியா் ல.அம்பிகா ஜெயின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செய்யாறு வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஜேஆா்சி வளாகத்தில் வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்துகொள்ளவுள்ளதால், விவசாயிகள் மேற்படி கூட்டத்தில் கலந்துக் கொண்டு பயன் அடையலாம் என இவ்வாறு தெரிவித்து உள்ளாா்.