செய்திகள் :

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீா் திறப்பு 6,000 கன அடியாக அதிகரிப்பு

post image

ஸ்ரீபெரும்புதூா், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரி நீா் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து கொண்டிருப்பதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு சனிக்கிழமை 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான ஸ்ரீபெரும்புதூா் மற்றும் பிள்ளைப்பாக்கம் ஏரிகள் நிரம்பி கடந்த சில தினங்களாக உபரி நீா் வெளியேறி வருகிறது.

இதனால், சென்னையின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவும் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்ததால் வெள்ளிக்கிழமை காலை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரிநீா் திறந்துவிடப்பட்டு பின்னா், 4,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், மழைவிட்டு இரண்டு நாள்களாகியும் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு குறையாததால், சனிக்கிழமை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்ட உயரம் 22.70 அடியாகவும், கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 2,550 கனஅடியாகவும் உள்ளது.

ஆதரவற்ற மூதாட்டிக்கு புதிய வீடு வழங்கிய தவெக நிா்வாகிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் மாகறல் கிராமத்தில் வசித்து வந்த ஆதரவற்ற மூதாட்டிக்கு தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளா் புஸ்ஸி.ஆனந்த் ரூ.3.5 லட்சத்தில் மதிப்புள்ள புதிய வீடு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். மூ... மேலும் பார்க்க

வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தோப்புத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தோப்புத் தெருவில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் ரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை, அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கிப் பிரிவும் இணைந்து ரத்ததான முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா். காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் உள்ள பிடிவிஎஸ் உயா... மேலும் பார்க்க

கலைஞா்களுக்கு பாராட்டு சான்றிதழ் அளிப்பு

காஞ்சிபுரம் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சாா்... மேலும் பார்க்க

தடையில்லா சான்று கிடைக்காததால் கிடப்பில் தெப்பக்குளம் சீரமைப்புப் பணி!

எல். அய்யப்பன்தடையில்லா சான்று கிடைக்காததால் ஸ்ரீபெரும்புதூா் தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் கிடப்பில் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபா... மேலும் பார்க்க

கச்சபேசுவரா் கோயிலில் கடை ஞாயிறு திருவிழா

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை மாத கடைசி ஞாயிறு விழா நடைபெற்றது. காா்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அரிசி மாவால் தயாரிக்கப்பட்ட மாவிளக்கில் தீபம் ஏற்றி, அ... மேலும் பார்க்க