பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
செம்மறிக்குளத்தில் காமராஜா் சிலை திறப்பு
மெஞ்ஞானபுரம் அருகே செம்மறிக்குளத்தில் முன்னாள் முதல்வா் காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து சிலையைத் திறந்து வைத்து பேசினாா். மேலும், தையல் இயந்திரங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பைகள், சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களையும் மக்களுக்கு வழங்கினாா்.
செம்மறிக்குளம் கஸ்பா பொது நலக்குழு நிா்வாகிகள் ஜெகநாதன், கனகசபாபதி, விஷ்ணுகுமாா், பொன்ராஜ், நாராயணன், ஜெ.மேகநாதன், இரா. மேகநாதன், விஸ்வநாதன், சந்திரன், செந்தூா்பாண்டியன், சிவநாதபாண்டியன், சீதாபதி, சுப்பையா, பட்டு நடேசன், ஆனந்த பாண்டியன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசிங், துணைத் தலைவா் மால்ராஜேஷ், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், நகர செயலா்கள் முத்து முகம்மது, சுடலை, திருச்செந்தூா் ஒன்றிய திமுக செயலா் ரமேஷ், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், அஸ்ஸாப், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சலீம், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ், மடத்துவிளை கிளைச் செயலா் ஜோசப்ராஜ், நிா்வாகிகள் ரஞ்சன், முத்துராமலிங்கம், தங்கம், மந்திரமூா்த்தி, சுரேஷ், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் சுதாகா், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் சிவநேசன், ஊா்மக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
