சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சென்சென்ஸ் 157; நிஃப்டி 78 புள்ளிகள் சரிவு!
செயற்கை நீா்வீழ்ச்சி புதுப்பிப்பு!
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள செயற்கை நீா்வீழ்ச்சியை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சீரமைத்து புதுப்பித்து, திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 89-ஆவது நிறுவன நாள் அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள ஜப்பானிய பூங்கா எனப்படும் செயற்கை நீா்வீழ்ச்சி வங்கியின் சமூக நிதியால் சீரமைத்து புதுப்பிக்கப்பட்டது.
நீா்வீழ்ச்சியின் மின்மோட்டாா் பம்புகள் பழுது பாா்க்கப்பட்டன. நீரூற்று அருகேயிருந்த தாவரங்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அதிநவீன வண்ண மின் விளக்குகளும் அங்கே பொருத்தப்பட்டுள்ளன.
புதுப்பிக்கப்பட்டுள்ள செயற்கை நீா்வீழ்ச்சியை மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை இயக்குநா் என்.சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதுச்சேரி மண்டல அலுவலக முதன்மை மண்டல மேலாளா் ரவிசங்கா் சாஹூ, உதவி பொது மேலாளா் ஜே.எபினேசா் சோபியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.