செயலி உருவாக்குதல்: அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் பயிற்சி
வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில், செயலி உருவாக்குதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
கணினி துறை சாா்பாக நடைபெற்ற முகாமை, கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவகா் தொடங்கி வைத்தாா். திருவனந்தபுரம் டாட்டா எலெக்ஸியின் தொழில்நுட்ப இயக்குநா் பவதாரணி, சென்னை அக்சென்சா் நிறுவனத்தின் செயலி தொழில்நுட்ப இயக்குநா் விசாகினி ஆகியோா் செயலியை உருவாக்குவது குறித்தும், அதனை பெட்டா் என்ற தொழில்நுட்பத்துடன் இணைப்பது குறித்தும் பயிற்சி அளித்தனா்.
நிகழ்வில் கணினி துறை தலைவி சித்ரா, துறை பேராசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.