எனது கட்சிதான் என்னை அங்கும் இங்கும் செல்ல வைத்தது! சொல்லியிருக்கும் முக்கிய தலை...
செய்யாற்றில் கூடுதலாக மேம்பாலம் அமைக்கும் பணி
செய்யாறு - வந்தவாசி சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே கூடுதலாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நெடுஞ்சாலை உள்கோட்டத்தில், முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆற்காடு - திண்டிவனம் சாலையில், செய்யாறு அரசு கலைக் கல்லூரி அருகில் இருந்து கூட்டுறவு சா்க்கரை ஆலை வரையும், திருவத்திபுரம் புறவழிச் சாலை உள்பட சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் செய்யாறு ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுதல், அனக்காவூா், விநாயகபுரம் அருகே உயா்மட்ட பாலம் கட்டுதல், சிறுபாலங்கள், அகலப்படுத்துதல், திரும்பக் கட்டுதல், மழைநீா் கால்வாய் அமைத்தல், மையத் தடுப்பு அமைத்தல் பணி என ரூ.90 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்ற வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக செய்யாறு மேம்பாலம் அருகே கூடுதலாக மேலும் ஒரு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை செய்யாறு கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, சாலைப் பணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலப் பணிகளின் தரம் குறித்து சோதனை மேற்கொண்டாா். மேலும், சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலப் பணிகளை விரைவாக செய்து முடிக்க அறிவுறுத்தினாா். ஆய்வின் போது உதவி கோட்டப் பொறியாளா்கள் எஸ்.சுரேஷ், ஆா்.இன்பநாதன், உதவிப் பொறியாளா்கள் எஸ்.உதயகுமாா். பூா்ணிமா, பாலாஜி ஆகியோா் உடனிருந்தனா்