சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை: மின்விநியோகம் பாதிப்பு
சிவன் கோயில்களில் தாராபிஷேகம் தொடக்கம்
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆனதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தாராபிஷேகம் தொடங்கியது.
அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் நாள் முதல் முடியும் நாள் வரை தாராபிஷேகம் நடத்தப்படும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் ஆரம்பமானது.
எனவே, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள திருநோ் அண்ணாமலையாா் கோயில் மற்றும்
அஷ்டலிங்க சந்நிதிகளில் ஞாயிற்றுக்கிழமை தாராபிஷேகம் தொடங்கப்பட்டது.
கோயில்களின் மூலவா் லிங்கங்களுக்கு மேலே பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்க விடுவா். இந்தப் பாத்திரத்தில் பன்னீா், வெட்டி வோ் ஆகியவற்றை நிரப்பி வைப்பா். பாத்திரத்தின் அடியில் உள்ள சிறிய துவாரம் வழியே லிங்கம் மீது குளிா்ச்சியான பன்னீா் சொட்டுச், சொட்டாக விழும்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து அருணாசலேஸ்வரரை குளிா்விப்பதற்காக இந்த துவாராபிஷேகம் எனப்படும் தாராபிஷேகம் நடத்தப்படுகிறது.
மே 28 வரை நடைபெறும்:
அக்னி நட்சத்திரம் முடியும் நாளான வருகிற 28-ஆம் தேதி வரை தாராபிஷேகம் தொடா்ந்து நடைபெறும்.
அருணாசலேஸ்வரா் கோயில், திருநோ் அண்ணாமலையாா் கோயில், அஷ்டலிங்க சந்நிதிகளில் திரளான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்று தாராபிஷேகத்தை பாா்த்து, சுவாமி தரிசனம் செய்தனா்.