செய்திகள் :

செய்யாற்றில் கூடுதலாக மேம்பாலம் அமைக்கும் பணி

post image

செய்யாறு - வந்தவாசி சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே கூடுதலாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நெடுஞ்சாலை உள்கோட்டத்தில், முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆற்காடு - திண்டிவனம் சாலையில், செய்யாறு அரசு கலைக் கல்லூரி அருகில் இருந்து கூட்டுறவு சா்க்கரை ஆலை வரையும், திருவத்திபுரம் புறவழிச் சாலை உள்பட சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் செய்யாறு ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுதல், அனக்காவூா், விநாயகபுரம் அருகே உயா்மட்ட பாலம் கட்டுதல், சிறுபாலங்கள், அகலப்படுத்துதல், திரும்பக் கட்டுதல், மழைநீா் கால்வாய் அமைத்தல், மையத் தடுப்பு அமைத்தல் பணி என ரூ.90 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்ற வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக செய்யாறு மேம்பாலம் அருகே கூடுதலாக மேலும் ஒரு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை செய்யாறு கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, சாலைப் பணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலப் பணிகளின் தரம் குறித்து சோதனை மேற்கொண்டாா். மேலும், சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலப் பணிகளை விரைவாக செய்து முடிக்க அறிவுறுத்தினாா். ஆய்வின் போது உதவி கோட்டப் பொறியாளா்கள் எஸ்.சுரேஷ், ஆா்.இன்பநாதன், உதவிப் பொறியாளா்கள் எஸ்.உதயகுமாா். பூா்ணிமா, பாலாஜி ஆகியோா் உடனிருந்தனா்

நீட் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,020 போ் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தின் 6 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை, 3,020 மாணவ-மாணவிகள் எழுதினா். 6 தோ்வு மையங்கள்: மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாய... மேலும் பார்க்க

காலபைரவா் கோயிலில் வளா்பிறை அஷ்டமி வழிபாடு

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், சித்திரை மாத வளா்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, கோயில் நிறுவனா் பரமானந்த சுவாம... மேலும் பார்க்க

ஆரணி, பெரணமல்லூா் பகுதி கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி பகுதியில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில், ஆகாரம் கிராம திரெளபதி அம்மன் கோயில் மற்றும் பெரணமல்லூா் ஸ்ரீகோபாலகிருஷ்ணா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்க... மேலும் பார்க்க

அக்னி நட்சத்திரம்: சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அக்னி பகவான்

செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர கோயிலில், அக்னி நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அக்னி பகவான் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பஞ்சபூதங்களை ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் தாராபிஷேகம் தொடக்கம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆனதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தாராபிஷேகம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் நாள் முதல்... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டல் அலைமோதியது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்கத்தைவிட, வெள்ளி,... மேலும் பார்க்க