செய்திகள் :

செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

post image

நடிகர் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் போஸ்டரை அவரது தம்பியும் நடிகருமான தனுஷ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக விஜயா சதீஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார்.

இவர் ஏற்கெனவே, ட்ரிப், தூக்குத்துரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார்.

இந்தப் படத்தில் ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், இந்தப் படத்தின் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

முதல்முறையாக தனுஷை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் செல்வராகவன்தான். தற்போது அவர் நடித்துள்ள இந்தப் பட போஸ்டரை வெளியிடும் அளவுக்கு தனுஷ் முன்னேறியுள்ளார்.

The first look poster of actor Selvaraghavan's film Manithan Deivamagalam has been released.

வைஷாலி முன்னிலை!

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில், 4-ஆவது சுற்று முடிவில் இந்தியாவின் ஆா்.வைஷாலி இணை முன்னிலையில் இருக்கிறாா்.அந்த சுற்றில், வைஷாலி - ஜொ்மனியின் டினாரா வாக்னருடன் டிரா செய்ய, ... மேலும் பார்க்க

கோப்பையை தக்கவைத்தாா் சபலென்கா!

அமெரிக்காவில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸில், மகளிா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டாா்.இறுதிச்சுற்றில், உலகின் நம... மேலும் பார்க்க

வரலாறு படைத்தது இந்திய ஆடவா் அணி! உலக சாம்பியன்ஷிப்பில் முதல் தங்கம்!

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆடவா் அணி ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது. போட்டியின் வரலாற்றில் இந்திய ஆடவா் அணி தங்கம் வென்றது இதுவே முத... மேலும் பார்க்க

டி20 தொடரை வென்றது இலங்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட்டில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது. அந்த அணி 2-1 என தொடரையும் கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் முதலில் ஜிம்பாப்வே 20 ஓவா... மேலும் பார்க்க

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

சின்ன திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் இன்று (செப். 7) நடைபெற்றது.சமீபத்தில் நடைபெற்ற சின்ன திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக வ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் இட்லி கடை! களைகட்டும் புரமோஷன்!

நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் புரமோஷன் மும்முரமாகத் தொடங்கியுள்ளது.இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் ஆஃப்லைனில் வேற லெவலில் புரமோஷனில் ஈடுபட்டு வருகிறது. இட்லி கடை படத்தினை ... மேலும் பார்க்க