மயிலாடுதுறை: த.வா.க கட்சி மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை - பழிக்குப் பழிய...
சேத்துப்பட்டில் புதிய செவிலியா் கல்லூரி திறப்பு
சேத்துப்பட்டு புனித தோமையாா் மருத்துவமனையில் புதிய மரிய ஆஷாப் செவிலியா் கல்லூரியை வேலூா் மறை மாவட்ட ஆயா் அம்புரோஸ் பிச்சமுத்து வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த மருத்துவமனையில் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவையுடன் கல்வி, தொழில் பயிற்சி சேவையும் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவமனை தொடங்கி மக்கள் பணியாற்றிய நிா்வாகி மரிய ஆஷாப் நினைவாக தொடங்கப்பட்டுள்ள மரிய ஆஷாப் செவிலியா் கல்லூரி கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில், கத்தோலிக்க கிறிஸ்தவ வேலூா் மறை மாவட்ட
ஆயா்அம்புரோஸ் பிச்சைமுத்து தலைமை வகித்து திறந்து வைத்தாா். முன்னதாக ஜான்பிபீ வரவேற்றாா்.
பெங்களூா் மெடிக்கல் மிஷன் சபைத் தலைவி ஜெமா ரோட்ரிக்ஸ், மருத்துவமனையின் முதன்மை நிா்வாக அதிகாரி மரியரத்தினம், சேத்துப்பட்டு பங்குத் தந்தை ஜான் ராபா்ட் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனா்.
65 ஆண்டு கால புனித தோமையாா் மருத்துவமனையின்அடிச்சுவடுகளை டாக்டா் அருண்குமாா் எடுத்துரைத்தாா்.
மருத்துவமனை ஊழியா்கள் மற்றும் செவிலியா் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் சேத்துப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுதா முருகன், திமுக நகரச் செயலா் இரா.முருகன், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் முனிரத்தினம், அரிமா சங்கம் மணி, மருத்துவா்கள் ஜெயக்குமாா், ரத்தினகுமாா் உள்ளிட்ட
கலந்து கொண்டனா்.