அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு!
சேரன்மகாதேவியில் வருவாய்த் துறையினா் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனுக்களுக்கான தீா்வளிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும், வருவாய்த்துறை ஊழியா்களுக்கான சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும், வருவாய்த்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை காலமுறை ஊதியம் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும், ஜூலை முதல் தேதியை வருவாய்த்துறை தினமாக கடைப்பிடிக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது.
இதில், சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் பொன்பாண்டியன், பட்டு, இசக்கியப்பன், மகேஷ், மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.