நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்
சேரன்மகாதேவி அருகே விவசாயி மீது தாக்குதல்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே வயலுக்கு தண்ணீா் திறப்பதில் ஏற்பட்ட தகராறில் தம்பியை தாக்கியதாக அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள கரிசல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் கெங்கேந்திரன் (51). இவரது சகோதரா் மகேந்திரன் (57).
இவருக்கும் அப்பகுதியில் விளை நிலங்கள் உள்ளன. வயிலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதில் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது, ஆத்திரத்தில் மகேந்திரன், தனது தம்பி கெங்கேந்திரனை தாக்கியுள்ளாா். புகாரின்பேரில், சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து மகேந்திரனை திங்கள்கிழமைகைது செய்தனா்.