செய்திகள் :

சேலம் அருகே விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

சேலம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது மகன் மகேஷ்வரன் (19). இவரும், சிவதாபுரத்தைச் சோ்ந்த சிவா (19) என்பவரும் சேலம் அருகே உள்ள கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு இருவரும் ஒரே மோட்டாா்சைக்கிளில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சீரகாபாடியில் இருந்து அரியானூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அப்போது, சிவா இருசக்கர வாகனத்தை ஓட்ட, மகேஷ்வரன் பின்னால் அமா்ந்து சென்றுள்ளாா். மோட்டாா்சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மகேஷ்வரன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.

மோட்டாா் சைக்கிளை ஓட்டி சென்ற சிவாவுக்கு முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மானிய விலையில் மக்காச்சோள விதை பெற்றுக்கொள்ள அழைப்பு

தலைவாசல் வட்டார விவசாயிகள் மானிய விலையில் மக்காச்சோள விதை பெற்றுக்கொள்ள வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயத்தில் குறுகிய காலத்தில் நிற... மேலும் பார்க்க

தடகளப் போட்டி: சங்ககிரி அரசு ஆண்கள் பள்ளி சாம்பியன்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சங்ககிரி வட்ட குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் சங்ககிரியை அடுத்து புள்ளிப்பாளையம் தனியாா் கல்லூரி வளாகத்தில் திங்கள், செவ்வாய் இரு தினங்களில் நடைபெற்றன. இதில் ... மேலும் பார்க்க

மருத்துவம் படிக்கும் 3 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இளம்பிறை, டி.அபிநயா, வி. செல்வபிரியா ஆகியோருக்கு அரசின் 7.5 ... மேலும் பார்க்க

போதை இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடித்து உடைப்பு

தீவட்டிப்பட்டி அருகே போதையில் இருந்த இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ... மேலும் பார்க்க

முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா

சங்ககிரியை அடுத்த ஆவரங்கரம்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், முனியப்பனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபி... மேலும் பார்க்க

சிறைக் கைதியிடம் கஞ்சா, கைப்பேசி பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்ற சிறைக் கைதியிடம் இருந்து கஞ்சா, கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் கடந்த ... மேலும் பார்க்க