செய்திகள் :

சேலம் எல்லைப் பிடாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!

post image

சேலம் எல்லைப் பிடாரியம்மன் கோயிலில் சக்தி அழைக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு ஏந்தி ஊர்வலம் வந்தனர்.

சேலம் அருள்மிகு எல்லைப் பிடாரி அம்மன் திருக்கோியிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம் அதன் அடிப்படையில் இந்த ஆண்டின் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

முன்னதாக சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இருந்து எல்லப்பிடாரியம்மன் பரிவாரங்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. திருக்கோவிலை வந்து அடைந்தவுடன் பூசாரி அம்மனுக்குச் சிறப்புப் பூஜை செய்தார். மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கவும் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றித் தந்த அம்மனுக்கு ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும் மாவிளக்கு ஏந்தியும் ஊர்வலமாக வந்து அம்மன் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினர்

தொடர்ந்து எல்லைப்பிடாரி அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சக்தி அழைக்கும் நிகழ்ச்சியைக் காண அப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாளை காலை பொங்கல் வைப்பு நிகழ்ச்சியும், அலகு குத்துதல் தொடர்ந்து சக்தி பூ கரகத்துடன் அம்மன் ஊர்வலம் 27ல் திருக்கல்யாணம் மற்றும் அக்னி குண்டத்தில் இறங்குதல் நிகழ்ச்சியும் 28-ந் தேதி பால்குட ஊர்வலம் மற்றும் 1008 லிட்டர் பால் அபிஷேகம் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சனிக்கிழமை இரவு சதாபரண நிகழ்ச்சியுடன் அம்மன் திருவிழா நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தன்பாலின ஈர்ப்பாளராகக் கணவர்... விவாகரத்து வழக்கில் முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை குற்றச்சாட்டு!

விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பமாக தனது கணவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்று முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் வீராங்கனை குற்றம் சாட்டி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அர்ஜுனா விருது வென்றவரான முன்னாள்... மேலும் பார்க்க

ஃபஹத் ஃபாசில், வடிவேலுவின் மாரீசன் வெளியீடு அப்டேட்!

மாரீசன் திரைப்படத்தின் வெளியீடு குறித்து அறிவித்துள்ளனர்.மாமன்னனில் மிகச்சிறப்பாகநடித்தவடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்று வருகின்றனர். அதற்காக, நிறைய கதைகளை வடிவேலு... மேலும் பார்க்க

எம்புரான் 3 நிமிட காட்சிகள் நீக்கம்!

எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டது.எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் - பிருத்விராஜ்ஜ... மேலும் பார்க்க

நிறைவடையும் ரஞ்சனி சீரியல்: அன்னம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ரஞ்சனி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், இத்தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் அன்னம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ரஞ்சனி தொடர் ஒளிபரப... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குநர் சனோஜ் மிஸ்ர கைது!

பிரபல பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ர பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார். ஸ்ரீநகர், கஸ்னவி, தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சனோஜ் மிஸ்ர. பெரிய வெற்றிகளைக் கொடுக்காவ... மேலும் பார்க்க