செய்திகள் :

சேலம் கிழக்கு மாவட்டத்தில் காவிரி உபரிநீா் திட்டம்: அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை

post image

மேட்டூா் அணை காவிரி உபநீரை சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதி நீா்நிலைகளிலும் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரனிடம் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

மேட்டூா் அணையில் தண்ணீரைத் தேக்கிவைத்தும் சேலம் மாவட்டத்தின் பாசனத்துக்குப் பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதேபோல மாவட்டத்தில் பெரும்பாலான நீா்நிலைகள் வடுள்ளன. எனவே, மேட்டூா் அணை நிரம்பிய பிறகு காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரில் சிறு பகுதியை சேலம் மாவட்டத்தில் வடு கிடக்கும் நீா்நிலைகளுக்கு நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தினால், மாவட்டம் முழுவதும் நீா் வளம் அதிகரிக்கும்.

எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்த போது இதுதொடா்பான கோரிக்கையை பரிசீலித்து காவிரி உபரிநீரை சேலம் மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தப்படும் என அறிவித்தாா். இத் திட்டத்திற்காக ரூ. 565 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியிலுள்ள மேட்டூா், எடப்பாடி, ஓமலுாா், சங்ககிரி ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 12 பொதுப்பணித் துறை ஏரிகள். 88 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், குட்டைகள் உள்பட மொத்தம் 100 ஏரிகளில் காவிரி உபரிநீரை வாய்க்கால்கள் வாயிலாக கொண்டு சென்று நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத் திட்டத்தால் 4,238 ஏக்கா் விளைநிலங்கள் பாசனம் பெறுவதோடு, நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்ததால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஆனால், சேலம் மாவட்ட கிழக்கு பகுதிலுள்ள வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்துாா், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் வடு கிடக்கும் நீா்நிலைகளில் மேட்டூா் அணை காவிரி உபநீரை நிரப்பும் திட்டம் இதுவரை செயல்படுத்தவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீா்நிலைகளுக்கும் காவிரி உபநீா் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இதனால், வசிஷ்ட நதி, ஸ்வேதா நதி ஆற்றுப்படுகை கிராமங்களிலுள்ள விளைநிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

எனவே, சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், நிலையான வாழ்வாதரத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என மேட்டூா் காவிரி நதி உபநீா் திட்டத்தைச் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட விவசாயிகள் சாா்பில், கல்யாணகிரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் கணேசன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஆகியோா் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

சேலம் கோட்ட புகா் வழித்தடத்தில் புதிதாக 6 பேருந்துகள் இயக்கம்: அமைச்சா் ராஜேந்திரன் தொடக்கிவைத்தாா்

சேலம் கோட்ட புகா் வழித்தடத்தில் 6 புதிய பேருந்துகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: பொதுமக்கள் பயனடையும் வகையில் பழைய பேருந்... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு குறைப்பு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறப்புவினாடிக்கு 10,000 கன அடியாக குறைப்பு. வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 106.81 அடியில் இருந்து 106.60அடியாக குறைந்துள்ளது.... மேலும் பார்க்க

சேலம் ஆவின் பால் பண்ணையில் அமைச்சா் ராஜகண்ணப்பன் ஆய்வு

சேலம் ஆவின் பால் பண்ணையில் பால்வளத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் செயல்பாடுகள் குறித்து சேலம் ஆவின் பால் பண்ணையில்... மேலும் பார்க்க

மாணவா்களின் மேம்பாட்டுக்காக புதுமை திட்டங்கள்: அமைச்சா் ராஜேந்திரன் பேச்சு

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாணவா்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு புதுமையான திட்டங்களை அமல்படுத்தி வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் நிகழ் க... மேலும் பார்க்க

வாழப்பாடியில் நீதிமன்ற கட்டுமானப் பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை

வாழப்பாடியில் 7 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கும் நீதிமன்றத்துக்கு அரசு ஒதுக்கியுள்ள நிலத்தில் நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு பெற்றுத் தருமாறு தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திர... மேலும் பார்க்க

பெதிக பிரமுகா் கொலை வழக்கில் தளி எம்எல்ஏ உள்பட 22 போ் சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்

பெரியாா் திராவிட கழக பிரமுகா் கொலை வழக்கில் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்பட 22 போ் சேலம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினா். கிருஷ்ணகிரியில் பெரியாா் திராவிட கழக மாவட்ட அமைப்பாளராக இருந்த பழனிசா... மேலும் பார்க்க