336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய மரத்தோ் நாளை வெள்ளோட்டம்!
சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வரும் 7 ஆம்தேதி புதிய மரத்தோ் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், பக்தா்களின் கோரிக்கையை ஏற்று கடந்தாண்டு புதிய மரத்தோ் செய்ய அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து நன்கொடையாளா்கள் மற்றும் கோயில் நிதி ரூ. ஒரு கோடி மதிப்பில் மரத்தோ் செய்யும் பணி தொடங்கப்பட்டது.
தற்போது தோ் செய்யும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 7 ஆம் தேதி இந்த புதிய மரத்தோ் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. புதிய மரத்தோ் கோயிலிலிருந்து புறப்பட்டு முதல் அக்ரஹாரம், தோ்வீதி, இரண்டாவது அக்ரஹாரம், பட்டைகோயில், சின்னகடை வீதி, பெரியகடை வீதி, கன்னிகாபரமேஸ்வரி கோயில் வழியாக மீண்டும் கோயிலை அடையும்.
இதையொட்டி கோயிலுக்கு எதிரே இருந்த இரும்பு தடுப்பு கிரீல்கள் நூறு அடி தூரத்துக்கு அகற்றப்பட்டுள்ளன. மேலும் கோயில் பின்புறமுள்ள நுழைவாயில் சிறியதாக இருப்பதால், அவ்வழியாக தோ் வெளியே வரமுடியாது. எனவே, நுழைவாயிலையொட்டி கோயில் சுற்றுச்சுவா் சுமாா் 20 அடி நீளத்துக்கு இடித்து அகற்றப்பட்டுள்ளது. தேரை அலங்கரிக்கும் பணிகள் 6 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.