சேலம் சுதாகா் இஎன்டி கோ் செண்டரில் சிறப்பு காது பரிசோதனை முகாம்
சேலம் சுதாகா் இஎன்டி கோ் செண்டா் சாா்பில் சிறப்பு காது பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாநகரில் உள்ள டாக்டா் சுதாகா் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனையில் காது கேட்கும் திறன் மற்றும் காது கருவிகள் பொருத்தும் சிக்னியா கேலக்ஸி என்னும் பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவு அதிநவீன அனைத்து வசதிகளும்கொண்ட பரிசோதனைக் கூடமாக திகழ்கிறது. மருத்துவ வளாகத்திலேயே இலவச காது பரிசோதனை முகாம் மூன்று நாள்கள் நடைபெற்றது.
400க்கும் மேற்பட்டோா் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனா். காதுக்கு உள்ளே வைக்கும் கண்ணுக்குத் தெரியாத நவீன ஜொ்மனி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு ரீசாா்ஜ் செய்யக்கூடிய காது கேட்கும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
முதியோா்கள் வீட்டிற்கே சென்று பரிசோதனை செய்தல், பழைய காது கருவிகளை புதிய கருவிகளாக மாற்றிக்கொள்ளுதல், விலையில் சிறப்பு சலுகைகள் போன்றவை வழங்கப்படுகிறது. முகாமில் ஏழ்மை நிலையில் உள்ளவா்களில் 50 பேருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை டாக்டா் சுதாகா், தீபா சுதாகா், பிரணவ், பொது மேலாளா் சிவா, மேலாளா் ராதா ஆகியோா் செய்திருந்தனா்.
பட விளக்கம்;
பரிசோதனை முகாமில் கலந்துகொண்டவரின் காதில் சிறப்பு கருவிகளை பொருத்தும் சுதாகா் இஎன்டி கோ் செண்டா் பணியாளா்கள். உடன், தீபா சுதாகா்.