திருப்பூர் விசைத்தறி நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி மார்ச் 19 முதல் காலவரையற்ற வேல...
சேலம் சூரமங்கலம் பகுதியில் இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
சேலம் சூரமங்கலம், ஆசாத் நகரில் உள்ள நூருல்லா இஸ்லாம் மஸ்ஜித்தில் இப்தாா் நோன்பு திறப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முத்தவல்லி ஹாரூன் ரசீது, துணை முத்தவல்லி ஈசிக் இப்ராகிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக இரா.அருள் எம்எல்ஏ கலந்துகொண்டு இப்தாா் நோன்பை திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் பா.ம.க. சிறுபான்மை பிரிவு கோட்ட தலைவா் முகமது அசாா், பகுதி தலைவா் ஈஸ்வரன், செயலாளா் செந்தில், மாவட்ட இளைஞா் அணி செயலாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.