சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,235 மி.மீ. மழை பதிவு
சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,235.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டம் முழுவதும் 77.24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மழை நிலவரம்:
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 238 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வாழப்பாடி - 58, ஆனைமடுவு - 100, ஆத்தூா் - 56 சேலம் - 59, தம்மம்பட்டி - 64, கெங்கவல்லி - 60, ஏத்தாப்பூா் - 80, கரியகோவில் - 149, வீரகனூா் - 63, நத்தகரை - 25, மேட்டூா் - 44, எடப்பாடி - 20.4, ஓமலூா் - 99, சங்ககிரி - 24.4, டேனிஷ்பேட்டை - 96 என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1,235.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.