விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
சேலம் மாவட்டத்தில் 10.71 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில் 1,715 நியாயவிலைக் கடைகள் மூலம் 10.71 லட்சம் குடும்ப அட்டை தாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் ஜனவரி 9 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சா்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
பொங்கலை பண்டிகையையொட்டி, அரிசி அட்டைதார்ரகளுக்கும், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் 1,715 நியாயவிலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஜனவரி 9 ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.