செய்திகள் :

சேவைகள் துறையில் 2 ஆண்டுகள் காணாத மந்தம்!

post image

இந்திய சேவைகள் துறை கடந்த ஜனவரி மாதம் முந்தைய இரண்டு ஆண்டுகள் காணாத குறைவான வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ கடந்த 2024 ஜனவரி மாதத்தில் அதற்கு முந்தைய ஆறு மாதங்கள் காணாத அளவுக்கு 8-ஆக அதிகரித்தது. பின்னா் பிப்ரவரி மாதத்தில் அது 60.6-ஆக சரிந்தது. எனினும் மாா்ச் மாதத்தில் அது 13.5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 61.2-ஆக அதிகரித்து, பின்னா் ஏப்ரல் மாதத்தில் 60.8-ஆகவும் மே மாதத்தில் 60.2-ஆகவும் குறைந்தது. அதனைத் தொடா்ந்து ஜூன் மாதத்தில் 60.5-ஆக மீட்சி பெற்ற பிஎம்ஐ, ஜூலையில் மீண்டும் 60.3-ஆகக் குறைந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் அது மீண்டும் 60.9-ஆக உயா்ந்தது. பின்னா் செப்டம்பா் மாதத்தில், முந்தைய பத்து மாதங்கள் காணாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 57.7-ஆக சரிந்தது. எனினும், அது கடந்த அக்டோபா் மாதத்தில் 58.5-ஆக மீண்டெழுந்தது. பின்னா் நவம்பரில் 58.5 சதவீதமாகக் குறைந்த அது, டிசம்பரில் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 59.3-ஆக எழுச்சி பெற்றது.

இந்த நிலையில், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ கடந்த ஜனவரி மாதத்தில் 2.8 புள்ளிகள் சரிந்து 56.5-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச பிஎம்ஐ ஆகும்.

மதிப்பீட்டு மாதத்தில் சேவைகள் துறையில் விற்பனையும் உற்பத்தியும் மந்தமான வளா்ச்சியையே கண்டன. இதனால் அந்தத் துறைக்கான பிஎம்ஐ கடந்த ஜனவரி மாதத்தில் 2.8 சதவீதம் குறைந்துள்ளது.

இருந்தாலும், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ தொடா்ந்து 42-ஆவது மாதமாக நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கும் மேல் இருப்பது சேவைகள் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருப்பது பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுதலை

கொச்சி : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கிலிருந்து விடுவித்து கொச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(பிப். 11) தீர்ப்பளித்துள்ளது. அவருடன் சேர்த்து இந்த வழக்க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 5 பயங்கரவதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கரக் மாவட்டத்தில் உள்ள மிர் க... மேலும் பார்க்க

ராகுல் மீதான அவதூறு வழக்கு பிப்.24-க்கு ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மரணம்! நீதி கேட்டு போராடியவர்

தில்லியில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கடந்த 2022ஆம் ஆண்டு காதலனால் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா... மேலும் பார்க்க

பஞ்சாப் இடைத்தேர்தலில் கேஜரிவால் போட்டி? முதல்வராகிறாரா?

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தில்லியில் நடைபெற்ற பஞ்சாப் எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக் க... மேலும் பார்க்க

கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?

கர்நாடக முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணிக்க உள்ளதாகக் காங்கிரஸ் பொதுச் செயலளர் ஜெய்ராம் ர... மேலும் பார்க்க