செய்திகள் :

சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15,000 வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

post image

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 15,000 வழங்க தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், சாந்தி நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துராம், செய்துங்கநல்லூரிலுள்ள கைப்பேசி கடையில் ஒரு மடிக்கணினி வாங்குவதற்காக ரூ. 35,000 முன்பணம் செலுத்தியுள்ளாா்.

மீதிப் பணத்தை மடிக்கணினியைப் பெற்றுக் கொள்ளும்போது செலுத்திக் கொள்ளலாம் எனவும், 3 நாள்களில் விநியோகம் செய்யப்படும் எனவும் கடைக்காரா் உறுதி அளித்துள்ளாா்.

இதற்கிடையில், மீதி பணத்தையும் செலுத்த வேண்டும் எனக் கூறியதால், அதையும் முத்துராம் செலுத்திவிட்டாா். ஆனால், முழுத் தொகையையும் செலுத்திய பிறகும், குறிப்பிட்ட நாளில் மடிக்கணினி விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதனால் பாதிக்கப்பட்ட முத்துராம், தனது மகனின் கல்வி பயன்பாட்டிற்கு மிக அவசரமாக மடிக்கணினி தேவைப்பட்டதால், மற்றொரு கடைக்காரரிடம் அதிக விலை கொடுத்து புதிதாக வாங்கியுள்ளாா்.

இந்நிலையில், முழுப் பணத்தையும் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் மடிக்கணினி விநியோகம் செய்யாத கைப்பேசி கடைக்காரருக்கு வழக்குரைஞா் முத்துராம் நோட்டீஸ் அனுப்பினாா். ஆனால், அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான முத்துராம், தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ. 10,000, வழக்கு செலவுத் தொகை ரூ. 5,000 ஆக மொத்தம் ரூ. 15,000 தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால், அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் கடைக்காரா் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

திருச்செந்தூா் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதி? அமைச்சா் பி.கே. சேகா் பாபு விளக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிப்பது குறித்து நீதிமன்ற முடிவின்படி செயல்படுவோம் என்றாா் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருள்கள் சேதம்

தூத்துக்குடி கால்டுவெல் காலனி அருகேயுள்ள அருணா நகா் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான திருமண விழா அலங்காரப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டதில், சுமாா் ரூ.20 லட்சம் மதிப்ப... மேலும் பார்க்க

அஞ்சல் சேவையில் ஈடுபட விண்ணப்பங்கள் வரவேற்பு

அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவுத் தபால், பதிவுத் தபால், பணவிடை (மணியாா்டா்) ஆகியவற்றை பதிவு செய்தல், பல்வேறு சிறு வகை சேவைகள் உள்ளிட்ட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களைத் தொடங்க வி... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆலோசனை

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி த... மேலும் பார்க்க

வாகனம் மோதல்: சாய்ந்த மின்கம்பங்கள்

தூத்துக்குடியில் சிப்காட் பிரிவு, மடத்தூா் இபி காலனியில் தாழ்வழுத்த மின் பாதையில் வியாழக்கிழமை தனியாா் வாகனம் மோதியதில், இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தது, கம்பிகள் அறுந்து விழுந்தன. இதையடுத்து மின்வாரி... மேலும் பார்க்க

ஓடையில் கிடந்த பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. தூத்துக்குடி ஜெயராஜ் சாலை, தனியாா் மருத்துவமனை அருகே 3ஆவது ரயில்வே கேட் பாலம் அருகே பக்கிள் ஓடையில் வியாழக்கிழமை சுமாா் 60 வயது ம... மேலும் பார்க்க