Weekend Sleep: வார இறுதி தூக்கம் இதயநோய்களை குறைக்குமா? - ஆய்வும் மருத்துவர் விள...
தூத்துக்குடியில் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருள்கள் சேதம்
தூத்துக்குடி கால்டுவெல் காலனி அருகேயுள்ள அருணா நகா் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான திருமண விழா அலங்காரப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டதில், சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் பூபால ராயா். இவா், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கான அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா்.
இப்பணிக்கான பொருள்களை அருணா நகா் பகுதியில் உள்ள தனது சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலையில், அந்தக் கிடங்கில் தீ விபத்து நேரிட்டதாம். அப்போது, காற்றின் வேகமாக வீசியதால் தீ மள மளவென பற்றி எரியத் தொடங்கியது.
இத்தகவலறிந்த தூத்துக்குடி தீயணைப்பு அலுவலா் கணேசன், நிலைய உதவி அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையிலான வீரா்கள், 3 வாகனங்களில் வந்து தீயை அணைத்தனா்.
எனினும், சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.