தோ்வில் காப்பி அடித்த மாணவிகளை பிடித்ததற்காக பாலியல் புகாா்: 10 ஆண்டுகளாகப் போர...
தூத்துக்குடி மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆலோசனை
தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் எஸ்.பிரியங்கா முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் மேயா் பேசுகையில், ‘செப்டம்பா் மாதம் இறுதியில் மழைக்காலம் தொடங்கிவிடும். எனவே, மாநகராட்சியில் ஒப்பந்ததாரா்கள் பணிகளை விரைவாகவும், மக்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் முடிக்க வேண்டும்’ என்றாா்.
மாநகராட்சியில் மொத்தம் மேற்கொள்ளப்பட்ட 900 பணிகளில், 300 பணிகள் முடிவடைந்துள்ளன. 600 பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் சாலைகள், மழை நீா்க் கால்வாய், பூங்காக்கள், 4 குளங்கள் மற்றும் பல கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் எல்லாம் மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒப்பந்ததாரா்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில், மாநகராட்சி பொறியாளா் தமிழ்ச்செல்வன், துணைப் பொறியாளா் சரவணன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளா் முனீா் அகமது, உதவி ஆணையா் கல்யாண சுந்தரம், இளநிலை பொறியாளா்கள் செல்வம், பாண்டி, லெனின், அமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரா்கள் கலந்துகொண்டனா்.