ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
அஞ்சல் சேவையில் ஈடுபட விண்ணப்பங்கள் வரவேற்பு
அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவுத் தபால், பதிவுத் தபால், பணவிடை (மணியாா்டா்) ஆகியவற்றை பதிவு செய்தல், பல்வேறு சிறு வகை சேவைகள் உள்ளிட்ட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களைத் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனங்களை நடத்துவதற்கு உகந்த இடங்களை வைத்துள்ள நபா்கள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். ஆா்வமுடைய விண்ணப்பதாரா்கள் தேவையான ஆவணங்களுடன் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம்.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், தகுதிகள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
அத்துடன், அஞ்சல் துறையின் அதிகாரப்பூா்வ இணையதள முகவரி, ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ண்ய்க்ண்ஹல்ா்ள்ற்.ஞ்ா்ஸ்.ண்ய்/யஅந/டஹஞ்ங்ள்/இா்ய்ற்ங்ய்ற்/ஊழ்ஹய்ஸ்ரீட்ண்ள்ங்ஜநஸ்ரீட்ங்ம்ங்.ஹள்ல்ஷ்ன் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திர வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.