NDA -விலிருந்து விலகிய TTV - பின்னணி என்ன? | GST 2.0 MODI STALIN BJP DMK | Imper...
வாகனம் மோதல்: சாய்ந்த மின்கம்பங்கள்
தூத்துக்குடியில் சிப்காட் பிரிவு, மடத்தூா் இபி காலனியில் தாழ்வழுத்த மின் பாதையில் வியாழக்கிழமை தனியாா் வாகனம் மோதியதில், இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தது, கம்பிகள் அறுந்து விழுந்தன. இதையடுத்து மின்வாரிய ஊழியா்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதன் காரணமாக மடத்தூா், இபி காலனி பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்னை ஏற்பட்டது. பணிகள் நிறைவு பெற்ற பின்னா் மின்சாரம் சீராக விநியோகிக்கப்பட்டது.