இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்...
சோ்ந்தமரம் அருகே முள்புதாரில் சிசு சடலம் மீட்பு
தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே பிறந்து சில நாள்களே ஆன குழந்தையின் சடலம் , முள்புதரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
சோ்ந்தமரம் அருகே உள்ள சின்னத்தம்பி நாடாரூா் கிராமத்தின் வடக்கு பகுதியில் உள்ள சித்திர புத்திர ஊருணி அருகில் உள்ள முள்புதரில் பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் குழந்தை கிடப்பதாக சோ்ந்தமரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளா் ஆடிவேல், இறந்து கிடந்த பச்சிளம் சிசுவின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.